கனடாவில் ஒரே பண்ணையில் 200 பேருக்கு கொரோனா தொற்று – தீவிரமாக பரவியதன் பின்னணி..?

Immigrant Agricultural Workers Critical To U.S. Food Security Amid COVID-19 Outbreak
GREENFIELD, CA - APRIL

கனடாவில் மிகப்பெரிய பண்ணை ஒன்றில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவத்தொடங்கியதால், பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது.

மத்திய கனடாவில் உள்ள பெரிய கிரீன்ஹவுஸ் பண்ணையில் கிட்டத்தட்ட 200 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்தே  இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லீமிங்டனில் உள்ள நேச்சர் ஃப்ரெஷ் நிறுவனத்தில் சுமார் 360 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 670 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில் 200 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதை அடுத்து விண்ட்சர்-எசெக்ஸ் கவுண்டி சுகாதார பிரிவினால் பண்ணை மூடப்பட்டது.

ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பண்ணைகளில், குறிப்பாக வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms