கனடாவில் அதிகரிக்கும் கொரோனா – எண்ணிக்கை 22 ஆயிரம் தாண்டியது

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல நாட்டு தலைவர்களும் தீவிர ஆலோசனைகளுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மருத்துவ உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கனடாவில் கொரோன வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கனடாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மார்டா மோர்கனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தற்போது வரை கொரோனா வைரஸால் கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – 22,148

பலியானோர் எண்ணிக்கை – 569

சிகிச்சை மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை – 6,013

கனடாவில் தினம் புதிதாக அடையாளம் காணப்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.