கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு – 675 பேருக்கு பாதிப்பு உறுதியானது!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில், 103 பேர் உயிரிழந்ததோடு, 675 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,498 ஆக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,085 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 34,539 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவகின்றனர். முன்னதாக 51,048 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 1,721 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.