கொரோனா வைரஸுக்கு முன்: கனடாவின் கடந்த கால சோக பக்கங்களை எழுதிய நோய்கள்

canada tamil news
canada tamil news

கொரோனா வைரஸ் உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இதன் தீவிரத்தை புரிந்துகொண்டு நோயைக் கட்டுப்படுத்த முயற்சிக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கனடாவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஒன்டாரியோவிலும், இன்னும் மூவர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ளனர்.

இதேபோல் கொரோனா வைரஸால் உலகளவில் 20,000க்கும் அதிகமானவர் பாதிக்கப்பட்டதுள்ளதுடன் 500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் 325 பேர் நாட்டை விட்டு வெளியேற கனடா அரசாங்கத்திடம் உதவி கேட்டுள்ளனர்.

கனடாவுக்கு குடிபெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு

இந்த வைரஸ் முதன்முதலில் டிசம்பர் 2019ஆம் ஆண்டு சீனாவின் வுஹானில் உள்ள சந்தை ஒன்றில் தோன்றியதாக நம்பப்படுகிறது.

கடந்த நூறு ஆண்டுகளில் கனடா நாட்டில் ஏற்பட்ட கடுமையான நோய்க்கொல்லிகளை பார்ப்போம்;

1918-19: ஸ்பானிஷ் காய்ச்சல்

20 நூற்றாண்டின் மிகவும் மோசமான நோயாக பேசப்படும் ஸ்பானிஷ் காய்ச்சளுக்கு உலக அளவில் 50-100 மில்லியன் மக்களும் கனடாவில் 55,000 பேரும் உயிரிழந்தனர்.

நவீன கப்பல்கள் மற்றும் போருக்காக உலகெங்கிலும் உள்ள படைகளின் விரைவான இயக்கம் போன்ற காரணங்களால் இந்த காய்ச்சல் பரவியதாக அமெரிக்காவின் என்பிஆர் தெரிவித்தது.

1957-1958: Influenza pandemic

இன்ஃபுளுவென்சா காய்ச்சளுக்கு உலக அளவில் 1-2 மில்லியன் மக்களும் கனடாவில் 7,000 பேரும் உயிரிழந்தனர்.

இந்த வைரஸ் முதன்முதலில் 1957ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
சிங்கப்பூரில் தோன்றி, இறுதியில் அந்த ஆண்டின் கோடைகாலத்தில் அமெரிக்காவை அடைந்தது என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.

1981-இன்று வரை: HIV/AIDS

HIV/AIDS கண்டுபிடிக்கப்பட்டதில் இருத்து உலக அளவில் 35 மில்லியன் மக்களும் கனடாவில் 26,000 பேரும் (2014 வரை) உயிரிழந்தனர்.

பாதுகாப்பற்ற உடலுறவு, ஓரின சேர்க்கை போன்ற காரணங்களால் கனடாவில் எச்ஐவி நோய் பரவத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

2003: SARS

SARS காய்ச்சளுக்கு உலக அளவில் 900 பேரும் கனடாவில் 44 பேரும் இந்த நோய் காரணமாக உயிரிழந்தனர்.

Severe acute respiratory syndrome என்பதன் ஆங்கிலச் சுருக்கம் SARS ஆகும். SARS-கொரோனா (SARS-CoV) நோய் முதலில் 2002ஆம் ஆண்டில் சீனாவின் குவாங்டாங்கில் ஒரு விலங்கு நீர்த்தேக்கத்திலிருந்து தோன்றி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

2009: H1N1 காய்ச்சல்

H1N1 காய்ச்சளுக்கு உலக அளவில் 18,000க்கும் அதிகமானோரும் கனடாவில் 428 பேரும் இந்த நோய் காரணமாக உயிரிழந்தனர். இதனை சிலர் பன்றிக்காய்ச்சல் எனவும் அழைத்தனர்.

பருவகால காய்ச்சல் போலல்லாமல், எச்1என்1 பல கனடா மக்களை அந்த ஆண்டின் வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் வாட்டியது.

இங்கிலாந்து இளவரசர் தம்பதிக்கு அரசு செலவில் பாதுகாப்பு வழங்கக் கூடாது; கனடா மக்கள் கருத்து

2019: கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸுக்கு முதல் பலி ஹாங்காங் நகரில் உள்ள மருத்துவமனையில் பதியப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், நோயை தடுக்க கனடா நாடு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.