அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை! இறப்பு எண்ணிக்கை குறைந்தாலும், கனடாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

corona
Vaccine Corona

கனடாவில் நேற்று 3150 கொரோனா தொற்றுகள் புதிதாக பதிவாகியுள்ளன.

ஒன்டாரியோ பகுதியில் 1076 பேரும், கியூபெக் பகுதியில் 984 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 445 பேரும், அல்பேர்ட்டா பகுதியில் 314 பேரும், சஸ்கிஸ்வானில் 395 பேரும், மனிடோபா  பகுதியில் 85 பேரும் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்  பதிவாகியுள்ளன.

மேலும்  ஒன்டாரியோ பகுதியில் 18 பேரும், கியூபெக் பகுதியில் 25 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 10 பேரும், சஸ்கிஸ்வான் பகுதியில் இரண்டு பேரும், மனிடோபா  பகுதியில் மூன்று பேரும் வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக  தகவல்கள் பதிவாகியுள்ளன.

கனடா அரசாங்கமும் கனடிய மக்களும் வைரஸ் தொற்றினை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தொற்றின் உருமாறிய திரிபுகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி கொண்டு வருகின்றன.

கனடாவில் இதுவரை ஏழு லட்சத்து 62 ஆயிரத்து 800 பேர் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

8 லட்சத்து 20 ஆயிரத்து முன்னூற்று ஆறு பேர் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.  21 ஆயிரத்து 162 பேர் தொற்று பாதிப்பினால் மரணித்துள்ளனர்.

இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருகின்றது. இருப்பினும் கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இதன் காரணத்தால் கனடாவில் ஒரு சில பிராந்தியங்களில் வீட்டில் தங்கும் உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: வருகின்ற பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் ஒன்ராறியோ முழுக்க அமலுக்கு வரும் உத்தரவு!