ஒன்ராரியோ மாகாணத்தில் கவலை கொள்ள வைக்கும் கொரோனா அதிகரிப்பு விகிதம்!

HEALTH-CORONAVIRUSCANADA

ஒன்ராரியோ மாகாணத்தில் 4400 க்கும் மேற்பட்ட வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஒன்ராரியோ மாகாணத்தில் ஒரு நாள் மட்டும் 2200 ஆக பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று 4812 ஆகவும், ஞாயிற்றுக்கிழமை 4250 ஆகவும் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து தற்போது உள்ள பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்படுகின்றன.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏழு நாட்கள் பதிவாகியுள்ள எண்ணிக்கையின் சராசரி 3767 ஆகவும் ,இரண்டு வாரங்களுக்கு முன்பு பாதிப்பு எண்ணிக்கையின் சராசரி ஆனது 2757 ஆகவும் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் covid-19 பரிசோதனை 42 ஆயிரத்து 753 பேருக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறு தொடர்ந்து கனடாவில் அனைத்து மாகாணங்களிலும் covid-19 வைரஸ் தொற்று இனம் காண்பதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

மேலும் சோதனை முடிவுகளில் பல்வேறு மக்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தவர்களாக இருக்கின்றனர்.

இதனையடுத்து மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி மருந்து வினியோகம் விரைவாக செய்யப்பட்டு வருகிறது.

கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் covid-19 மூன்றாவது அலையாக உருவாகும் முன்னரே கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது.

ஊரடங்கு அறிவிப்பு தொடர் நீட்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலை பெரும்பாலான மாகாணங்களில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.