முறியடிக்கப்பட்ட கொரோனா: உலகில் முதல் நாடாக உட்கொள்ளக்கூடிய மருந்தை கண்டுபிடித்த கனடா!

COLCHICINE
CANADIAN ANTI-INFLAMMATORY DRUG COLCHICINE REDUCES COVID-19 RELATED COMPLICATIONS, DEATH

கனடாவில் கொரோனாவை கட்டுப்படுத்த சமீபத்தில் நைட்ரிக் அமில நாசில் ஸ்பிரே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், கொரோனாவுக்கெதிராக இன்னொரு மருந்து நல்ல பலன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்சிற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக கனடாவில் பெரிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில், colchicine என்ற மருந்து கொரோனா சிகிச்சையில் நல்ல பலன் அளிப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த மருந்தானது நோயின் பக்கவிளைவுகளையும் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக கனேடிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

colchicine மருந்தானது கொரோனாவுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் முதல் விழுங்கக்கூடிய மருந்தாகும்.

இது ஒரு மிகப்பெரும் அறிவியல் கண்டுபிடிப்பு என மொன்றியல் இதய நோய் சிகிச்சை மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், colchicine மருந்தானது கொரோனாவால் ஏற்படும் மரணம் மற்றும் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 21 சதவிகிதம் குறைத்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு, கனடா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவில் 4,488 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்களில் 4,159 பேருக்கு பி.சி.ஆர் முறையில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவர்களுக்கு colchicine மருந்து கொடுக்கப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டதில், 25 சதவிகிதம் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டது.

மேலும் 50 சதவிகித நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் வைக்கப்படுவதற்கான தேவை தவிர்க்கப்பட்டது.

மேலும், 44 சதவிகிதம் மரணமும் இந்த மருந்தால் தவிர்க்கப்பட்டதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதால் இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

இதையும் படியுங்க:  கனடாவுக்கு திரும்ப இயலாத சூழல் ஏற்படலாம் – கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!