கனடாவில் கடந்த ஆண்டு இதே நேரத்தில் கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் – கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வழிமுறைகள் கூறிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

canada travel

.வீரியம் மிக்க ஓமிக்ரோன் மாறுபாடு மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் கனடாவில் பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் மாற்றியமைக்கப்பட உள்ளன. கனடாவிற்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கனடிய சுகாதார அமைச்சர் யவ்ஸ் டக்லஸ் செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.

எதிர்வரும் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் அயல் நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு கனடிய அரசாங்கம் குடிமக்களை வலியுறுத்தியது

Covid-19 வைரஸ் தொற்றின் கவலைக்குரிய மாறுபாடான ஓமிக்ரோன் தொற்று நோயின் நிலைமை தீவிரமடைந்தால் கனடாவில் இடைக்கால பொதுசுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். பயணத் தடைகள் மற்றும் மோசமான ஓமிக்ரோன் மாறுபாடு போன்றவை மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளதால் நான்கு வாரங்களில் பயண ஆலோசனைகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது

தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான விமானச் சேவையை ரத்து செய்ததை தொடர்ந்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர கூட்டத்தில் கனடாவின் எல்லைகளை மூடுவதற்கு முன்மொழிந்தார். ஆனால் மாகாணங்களின் முதல்வர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சுகாதார அமைச்சர் டக்லஸ் ” கனடிய விமான நிலையங்களில் பயணிகளின் covid-19 வைரஸ் தொற்று பரிசோதனை அதிகரிக்கப்பட்டு பின்னர் பொது சுகாதார நடவடிக்கைகள் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.கடந்த ஆண்டு இதே நேரத்தில் கனடாவிற்குள் நுழையும் பயணிகள் அனைவரும் விடுதிகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.