கிறிஸ்டின் எலியட் மற்றும் மேத்யூ ஆண்டர்சன் மெய்நிகர் காணொளி வாயிலாக மாநாட்டில் பங்கேற்பு

christine eliot ontario health

கிறிஸ்டின் எலியட் அறிவிப்பு :

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைபவர்கள் எண்ணிக்கை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்கள் மற்றும் covid-19 வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைகிறது.

ஒன்டாரியோ மாகாணத்தின் துணை முதல்வர் மற்றும் ஒன்டாரியோ சுகாதார அமைப்பின் தலைமை அதிகாரியுமான கிறிஸ்டியன் எலியட் இன்று பிற்பகல் அறிவிப்பினை வெளியிடுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

துணை முதல்வர் மற்றும் சுகாதார அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான கிறிஸ்டின் எலியட் உடன் மாகாணத்தின் சுகாதார தலைவரான மேத்யூ ஆண்டர்சன் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மெய்நிகர் வாயிலாக செய்தி மாநாட்டில் கலந்து ஆலோசிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ஒன்ராரியோ மாகாணத்தில் தினசரி 100லிருந்து 200 வரை புதிய covid-19 தொற்றுகள் பதிவாகின்றன.இதனோடு ஏழு நாள் சராசரி தொற்று எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.

ஒன்டாரியோவில் covid-19 தடுப்பூசி மருந்துகள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருவதால் தொற்று பரவும் தீவிரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. Covid-19 வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு தடுப்பூசி முக்கிய காரணியாக அமைகிறது.

ஒன்ராரியோ மாகாணத்தில் இதுவரை 67 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளையும் பெற்றுள்ளனர். 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் கட்ட தடுப்பூசி மருந்தை 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெற்று இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.