கனடாவை வம்புக்கிழுத்த சீனா – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பற்றி விமர்சனம்

china canada

கனடாவில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்த லாரி ஓட்டுநர்களின் Freedom convoy போராட்டம் உலக நாடுகள் அனைத்தின் கவனத்தையும் கனடாவின் பக்கம் ஈர்த்தது. ஹாங்காங் தொடரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பற்றிய விளக்கத்திற்காக கனடிய அரசாங்கத்தைச் சீனா விமர்சித்துள்ளது .சீனாவின் விமர்சனத்தில் பிரதமர் ட்ரூடோவின் அரசாங்கம் இரட்டை ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் விமர்சனத்திற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். COVID-19 ஆணைகளுக்கு எதிரான Freedom Convoy போராட்டமானது கனடிய அரசாங்கத்தின் உள்நாட்டு விவகாரம் என்பதால் சீனா அதிபர் அதில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.

சீனாவின் ஹாங்காங் நகரில் நடைபெற்ற பேரணியில் போராட்டக்காரர்கள் காவல்துறையை தாக்கி சட்டவிரோதமாக செயல்பட்ட போது கனடிய அரசாங்கம் மனித உரிமைகள் என்று கூறி பொறுப்பற்ற கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்தது. மேலும் ஹாங்காங் காவல்துறையை அவதூராக பேசியதாக செய்தி தொடர்பாளர் கூறினார்.

கனடாவிலுள்ள லாரி ஓட்டுனர்கள் ஜனவரி மாத இறுதியில் Covid-19 ஆணைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்தனர்.தொற்றுநோய் கட்டுப்பாடுகளின் விதிமுறைகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்றுதிரண்ட பின்னர் போராட்டம் வலுவடைந்து அரசாங்கத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டது. இந்நிலையில் கனடாவை சீனா விமர்சித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது ஊடகங்களில் அதிக அளவில் பேசப்படுகின்றன