சீனாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்கள் – பிரதமரின் குற்றச்சாட்டுக்கு சீனாவின் பதில் என்ன.?

Coronaviru Canada lost a record one million jobs in March

இரண்டு கனேடியர்கள் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக சீனாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டு, பொறுப்பற்றது என சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தக தடைகளை மீறியதாக சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தின்  தலைவர் கனடாவில் கைது செய்யப்பட்டார்.

கனடாவின் இந்த நடவடிக்கைக்கு பழி வாங்கும் வகையில் சீன அரசு கனடாவைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளது என்ற  குற்றச்சாட்டை பிரதமர் ஜஸ்டின் முன்வைத்தார்.

இதனை சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் மறுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், ” கனடா பிரதமர் பொறுப்பற்ற முறையில் எங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

கனடாவில் நடந்த கைது சம்பவத்துக்கும் சீனாவில் நடந்த கைது சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

எங்கள் நாட்டில் விதிமீறல்களில் ஈடுபட்டோர் மீது, எங்கள் சட்ட திட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே தேவையில்லாத மற்றொரு பிரச்சனையுடன் இதை தொடர்புபடுத்தி பேசுவது சரியல்ல” என பேசியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms