2 கனேடியர்களுக்கு சீனாவில் நேர்ந்த அவலம் – கனடிய வெளியுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பு!

anadian citizens Michael
Detained Canadian citizens Michael Kovrig, left, and Michael Spavor, right, are due to go on trial in China.

சீனாவின் பீஜிங் நகரத்தில் 2 கனேடியர்களுக்கு எதிராக நாளை வழக்கு ஆரம்பமாக உள்ளது. 2 கனடியர்கள் சீனாவை உளவு பார்த்ததாக வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை அன்று இருவருக்கும் எதிராக வழக்கு ஆரம்பமாக உள்ளதாக கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் கார்னியு தகவலை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் தேதி 19 ஆம் நாளிலிருந்து 22 ஆம் தேதி வரை 2 கனடியர்களையும் விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பீஜிங்கில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனடியர்களுக்கும் ஒட்டாவா வெளியுறவு தூதரகம் அணுகலை தேடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பீஜிங்கில் உள்ள கனடிய தூதரகம் வழக்கு விசாரணை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கனடியர்கள் இருவரையும் விடுவிப்பது அரசாங்கத்தின் முதல் உரிமை ஆகுமென்று கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கனடாவை சேர்ந்த மைக்கேல் கோரிக் மற்றும் மைக்கேல் பாவர் ஆகிய இருவரும்தான் சீனாவில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரு கனடியர்களையும் கிட்டத்தட்ட 800 நாட்களுக்கும் மேலாக பிடித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சீனாவில் இருக்கும் கனடிய தூதரகம் எதிர்வரும் 19ஆம் தேதியில் ஆரம்பமாகவுள்ள வழக்கு விசாரணை பற்றி விரைவில் தகவலை வெளியிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளது.