பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி செய்தி – குழந்தைகளுக்கான பைசர் தடுப்பூசியை ஹெல்த் கனடா அங்கீகரித்துள்ளது

corona
Canada Corona Vaccine

கனடாவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக பைசர் பயோடெக் தடுப்பூசி மருந்துகளை வழங்குவதற்கு ஹெல்த் கனடா அனுமதி அளித்துள்ளது. குழந்தைகளுக்கு covid-19 தடுப்பூசி மமருந்துகளை அங்கீகரித்து இருப்பதால் பொது நிகழ்ச்சிகள் மற்றும் வகுப்பறைக்குள் முக கவசம் அணிந்துகொள்ள அவசியம் இல்லாத நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வார தொடக்கத்திலிருந்து குழந்தைகளுக்கான covid-19 தடுப்பூசி மருந்துகளை அனைத்து மாகாணங்களிலும் வழங்க தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 18ஆம் தேதி 5 முதல் 11 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கான பைசர் பயோடெக் தடுப்பூசி மருந்துகளை அங்கீகரிக்குமாறு ஹெல்த் கனடாவிடம் பைசர் நிறுவனம் கோரிக்கை வைத்திருந்தது.ஹெல்த் கனடா பைசர் தடுப்பூசி மருந்துகளின் தரவுகளை மதிப்பாய்வு செய்ததில் ,குழந்தைகளுக்கு தடுப்பூசியினால் அதிக நன்மைகள் இருப்பதால் அங்கீகரித்தது என்று கூறப்படுகிறது.

குழந்தைகள் மீதான சோதனை முடிவில் ,covid-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் 90.7% பயனுள்ளதாக இருந்தது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். குழந்தைகளுக்கான covid-19 தடுப்பூசி மருந்துகள் சிறந்த பாதுகாப்பு மற்றும் செயல்திறனை கொண்டுள்ளன. மேலும் பக்க விளைவுகள் ஏதும் கண்டறியப்படவில்லை.

கனடாவில் covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலைக்கு மத்தியில் குழந்தைகளுக்கு அதிகரித்து வரும் covid-19 வழக்குகளின் எண்ணிக்கையில் பைசர் தடுப்பூசி மருந்துகள் அங்கீகரிக்கப்பட்டது அனைவருக்கும் நல்ல செய்தியாகும் என்று ஹெல்த் கனடாவின் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் சுப்ரியா சர்மா கூறினார்.