நிதி உதவி நிற்கப்போவதில்லை! கனடா மீட்பு நிதி உதவி திட்டத்தை மேலும் நீட்டிக்கும் மத்திய அரசாங்கம்!

CERB
CERB Fund Extend

CERB எனப்படும் கனடா மீட்பு நிதி உதவி திட்டத்தை மத்திய அரசாங்கம் மேலும் 12 வாரங்களுக்கு நீட்டிக்கிறது.

இன்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் இந்த அறிவித்தலை வெளியிட்டார். தனது அரசாங்கம் CERB  எனப்படும் கனடா மீட்சி பராமரிப்பாளர் கொடுப்பனவு திட்டத்தையும் நீட்டிக்கும் என பிரதமர் ட்ரூடோ இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருக்கிறார்.

CERB எனப்படும் கனடா மீட்சி ஓரின கொடுப்பனவு விதி முறை மாற்றங்களின் மூலம் நான்கு வாரங்களாக நீட்டிக்க அரசாங்கம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மார்ச் மாதத்தில் இறுதிக்குள் சில பெறுநர்கள் இந்த உதவி திட்டங்களை இழக்க உள்ள நிலையில் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.

covid-19 தொற்றுகளில் நெருக்கடிகள் முடியவில்லை என்று கூறிய பிரதமர் ஜஸ்டின் இந்தநிலையில் அனைவருக்குமான அரசாங்கத்தின் உதவியும் முடிவடையாதது என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் EI எனப்படும் வேலை காப்புறுதி எண்ணிக்கை வரும் வாரங்களில் அதிகரிக்கப்பட உள்ளது.

சி ஆர் பி மற்றும் சி ஆர் சி பி ஆகியன கிடைப்பதற்கு ஆகக்கூடிய காலம் சுமார் 12 வாரங்களாக அதிகரிப்பதால் 26 வாரங்களில் இருந்து 38 வாரங்கள் வரை அதிகரிக்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இரண்டு வாரம் வழங்கப்படும் சி ஆர் எஸ் பி விதி மாற்றங்களின் மூலம் நான்கு வாரங்களாக நீட்டிக்கப்பட உள்ளது.

அதே வேளையில் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதிக்கும் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கும் வழங்கப்படும்.

வழமையான EI கொடுப்பனவு சட்டத்திருத்த மூலம் 24 வாரங்கள் வரையான காலப்பகுதியில் ஆகக்கூடியது 50 வாரம் வரை நீடிக்கும். இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: போலியான சோதனை முடிவுகளை காட்டி கனடா வர நினைத்தால் ஆயிரக்கணக்கான டாலர் அபராதம்!