சேதி தெரியுமா! உலகிலேயே சட்டப்பூர்வமாக கஞ்சாவை வியாபாரமாக்கிய முதல் நாடு கனடா

Cannabis Canada: உலகிலேயே முதன்முதலாக கஞ்சாவை வியாபாரமயமாக்கியுள்ள நாடாக கனடா விளங்குகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த 2018ம் ஆண்டு கனடா அரசு வெளியிட்டது.

பொழுதுபோக்கு உபயோகத்திற்காக கஞ்சாவை சட்டபூர்வமாக விற்பனை செய்துகொள்ள கனடா அனுமதி வழங்கியுள்ளது.

பேஸ்புக் காதல் – கனடா ஆசிரியையை மணந்த மகாராஷ்டிர வாலிபர்

கனடாவின் கிழக்கு மாகாணமான நியூஃபவுண்ட்லேண்டிலும் லாப்ராடூரிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

கனடா வரலாற்றில் 2018 முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு முழுவதும் இருந்த தடை நீங்கியது. இதன்மூலம் வயது வந்த கனடிய மக்கள் சட்டபூர்வமாக கஞ்சாவைப் புகைக்க முடியும்.

நுகர்வோர்கள் ஆன்லைனில் பதிவுசெய்து மாகாண அரசாங்கங்கள் அல்லது உரிமம் பெற்ற சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கலாம்.

கனடாவில் 2020ம் ஆண்டில் இந்த வேலைகளுக்கு தான் அதிக சம்பளமாம்

ஆனால், இதில் ஆச்சர்யம் என்னவெனில், கஞ்சாவை சட்டரீதியாக அங்கீகரித்த போதிலும், முதல் ஆண்டில் எதிர்பார்த்த அளவுக்கு இந்த திட்டம் நிறைவேறவில்லை. வருமானமும் இல்லை.