மூத்த குடிமக்களுக்கு 500 டாலர் உதவித் தொகை எப்போது வழங்கப்படும்? பிரதமர் ஜஸ்டின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் நீண்டகால பரமாரிப்பு இல்லங்களில் வசித்து வந்த முதியோர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட, மூத்த குடிமக்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அதன்படி, வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி முதல் உதவித்தொகை  வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்களுக்கு 500 டாலர் வரை உதவித்தொகை வழங்க மத்திய அரசாங்கம் 2.5 பில்லியன் டாலர்கள் நிதியை ஒதுக்கியுள்ளது.

முதியோர் பாதுகாப்பு நலனுக்காக தகுதி பெற்றவர்களுக்கு 300 டாலர்களும், மேற்படி உத்தரவாத வருமான கூடுதல் தொகை பெறுபவர்களுக்கு கூடுதல் 200 டாலர்களும் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் 2.2 மில்லியன் மூத்தகுடிமக்கள் 500 டாலர் பெற தகுதி பெற்றுள்ளனர்.