கனடா முழுவதும் பெற்றோர்களிடையே கணக்கெடுப்பு – மாணவர்களிடையே covid-19 வைரஸ் தொற்று

covid19

கனடாவில் covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் கணிசமாக குறைவதை தொடர்ந்து பெரும்பான்மையான மாகாணங்களில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவர்களிடையே covid-19 வழக்குகள் பதிவாகி உள்ளன.இதுகுறித்து கனடா அளவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பெரும்பாலானோர் பள்ளி மாணவர்களிடையே covid-19 வைரஸ் தொற்று பரவுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். பாடசாலை ஊழியர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது குறித்து நிபந்தனைகள் உள்ளதா என்று 1000 பேரிடம் தொலைபேசி வாயிலாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பு செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற்றது

கனடாவில் covid-19 வைரஸ் தொற்று நோயின் நான்காவது அலைக்கு மத்தியில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு திரும்புவதை பெற்றோர்கள் பாதுகாப்பான முறையாக அமைய வேண்டும் என்று கூறுகின்றனர். பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகள் பள்ளியில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதில் நம்பிக்கை உள்ளது என்று கணக்கெடுப்பின்போது தெரிவித்துள்ளனர்.

சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர். அல்பேட்டா போன்ற மாகாணங்களில் தனிமைப்படுத்தல் மற்றும் முக கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன.

கணக்கெடுப்பின்போது பதிலளித்தவர்களில் சிலர் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வைரஸ் தொற்று பரவுவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கனடா முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் எதிர்மறையான முடிவுகளை பெற்றவர்களின் விகிதம் குறைவாக உள்ளது என்று கூறப்படுகிறது.