ஆவேசத்தில் உள்ள கனடியர்கள் – பிரதமர் ட்ரூடோவின் அடுத்த கட்ட நடவடிக்கை

ottawa protest

கனடாவில் லிபரல் அரசாங்கத்தின் covid-19 ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுனர்கள் தலைநகர் ஒட்டாவாவில் நாடாளுமன்ற வளாகத்தை சுற்றிவளைத்தனர்.

கனடா -அமெரிக்கா எல்லையைத் தாண்டும் லாரி ஓட்டுநர்களுக்கு covid-19 பரிசோதனையை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கட்டாயமானதாக அறிவித்தார்.covid-19 ஆணைகளை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக தலைநகரில் போராட்டம் வலுத்து வருகிறது.

போராட்டம் குறித்து எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் மூன்றில் இரண்டு பங்கு கனடியர்கள் covid-19 கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தை எதிர்த்து வருவதாகவும்,பத்தில் நான்கிற்கும் மேற்பட்டோர் போராட்டத்தை ஒரு சுயநல நிகழ்வாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

30% கனடியர்கள் covid-19 ஆணைகளுக்கு எதிரான போராட்டத்தில் நூற்றுக்கணக்கான டிரக்குகள் தலைநகர் ஒட்டாவாவில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. LEGER நிறுவனத்தால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்ப்பாளர்கள் ஒரு சிறுபான்மையினரின் குறைகளை விட பரந்த கவலைகளை தெரிவித்திருக்கலாம் என்று Leger அமைப்பின் நிர்வாக துணைத் தலைவர் Andrew Enns கூறினார்.

தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்றுவரும் Freedom Convoy போராட்டம் பயங்கரமானதாக இருப்பதாகவும் பாதிக்கும் மேற்பட்ட கனடியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 23 சதவீதத்தினர் மட்டுமே இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் நடைபெற்றுவரும் போராட்டமானது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கலாம் என்றும் லிபரல் அரசாங்கத்தின் தலைமைக்கு Andrew தெரிவித்துள்ளார்.

Poilievere Tory தலைவராக மாறினால் லிபரல் கட்சியினரின் ஆதரவு 33 சதவீதத்தில் இருந்து முப்பத்தி ஒன்றாக குறையும் என்று கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.