உக்ரேனில் சேவை செய்யும் கனடிய அமைப்பு – ஆபத்தான சூழலில் உக்ரேனிய மக்கள்

ukraine nato canada

ரஷ்யா இரக்கமற்ற தாக்குதலை உக்ரைன் மீது நடத்தி வரும் நிலையில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளுக்கு அகதிகளாக குடியேறுகின்றனர். உக்ரேனில் பணி புரியும் கனடாவின் லாப நோக்கமற்ற நிறுவனங்கள் முடிந்த அளவு மனிதாபிமான உதவிகளை வழங்கிவருகின்றன. தற்பொழுது நாட்டில் நிலைமை மோசமடைந்துள்ளதால் தேவையான உதவிகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

ஒரு வருடத்திற்கு முன்பு உக்ரைனுக்கு குடிபெயர்ந்த குடும்பம், ரஷ்யாவின் கடுமையான போரை எதிர்த்து உக்ரைன் போராடும் போதும் உக்ரைனை விட்டு வெளியேறாமல் நாட்டில் தங்க திட்டமிட்டுள்ளதாக அந்த குடும்பம் தெரிவித்துள்ளது.”இது மிகவும் மிகவும் குழப்பமாக உள்ளது ” என்ற அந்த குடும்பத்தை சேர்ந்த Martz என்ற நபர் கூறினார்.

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் நிலைமை மோசமடைந்து வருவதால் மாகாணங்கள் தங்களுக்கான உணவை கூட வழங்க இயலாமல் சிரமப் படுவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உக்ரேனின் முக்கிய நகரங்களிலிருந்து உணவு, நீர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் பரிமாற்றத்தை ரஷ்ய ராணுவம் துண்டித்தது.மேலும் சமீபத்திய நாட்களில் ரஷ்ய ராணுவம் குடிமக்கள் மீது வான்வழித் தாக்குதல்களை தீவிரமாக நடத்தி வருகிறது.

ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உக்ரேனிய அகதிகள் அதிக அளவில் அண்டை நாடுகளுக்கு வெளியேறுவதுடன், போரில் சிக்கியுள்ள சாதாரண மக்களுக்கு உதவ முயற்சிக்கும் கனடிய மனிதாபிமான அமைப்புகளின் பணியை கடினமாக்கியுள்ளது .உக்ரேனிலேயே பொருட்களை வினியோகிக்கும் பணி ஆபத்தானதாக மாறியுள்ளதாகவும் கனடிய அமைப்பு தெரிவித்துள்ளது.