கனடாவில் அதிர்ச்சி சம்பவம்! சுயநினைவின்றி உள்ளாடையுடன் இருந்த மாணவியை தலையில் மிதிக்கும் பெண் காவலர்!

Mona Wang

கனடாவில் செவிலியர் பயிற்சி மாணவி ஒருவரை பெண் காவலர் ஒருவர் மோசமாக நடத்தும் வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கெலோனாவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் செவிலியர் பயிற்சி பெறும் Mona Wang என்ற  உளப்பிறட்சி பிரச்சனை கொண்ட பெண்ணுக்கு உதவி தேவை என அவரது ஆண் நண்பர் கவல்துறையினரைஅழைத்துள்ளார்.

ஆனால் உதவிக்காக வந்த Cpl. Lacy Browning என்னும் பெண் காவலரே தன்னை தாக்கியதாகவும் அவமதித்ததாகவும் புகாரளித்திருந்தார் Mona.

தான் பாதி நினைவுடன் குளியலறையில் கிடந்தபோது Lacy தன்னை வயிற்றில் மிதித்ததாகவும், தன் கையில் ஏறி நின்றதாகவும் தெரிவித்தார் Mona.

எனவே, அந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராக்களில் பதிவான காட்சிகளை சோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த வீடியோவில் சரியான நினைவின்றி கிடக்கும் Monaவை காவலர்  வழி முழுவதிலும் தரதரவென கையைப் பிடித்து இழுத்துவரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

மேலாடை அணியாமல், வெறும் உள்ளாடை மற்றும் பேண்ட் மட்டும் அணிந்திருக்கும் அவரை, பெண் காவலர் காலால் தலையை மிதித்து தள்ளும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.

வீடியோ காட்சிகளால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பெண் காவலர்  Lacyயை நிர்வாக பொறுப்புகள் துறைக்கு பணிமாற்றம் செய்துள்ளதோடு, துறை ரீதியான விசாரணை ஒன்றிற்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms