ஆண் வீரர்களுடன் குளியலறை! கனடா இராணுவம் பற்றி அதிர்ச்சிகர தகவலை வெளியிட்ட பெண்!

Alexandra Auclair
Woman alleges forced co-ed showers, says Canadian military

கனேடிய இராணுவத்தின் மீது பாலியல் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு கனேடிய இராணுவத்தில் வரவேற்பு இல்லை என்றும், அவர்களை குழந்தை பெறும் இயந்திரங்கள் என விமர்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

தற்போது, Alexandra Auclair என்ற பெண், தன்னை ஆண் இராணுவ வீரர்களுடன் ஒரே குளியலறையில் குளிக்க கட்டாயப்படுத்தியதாக திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

198 ஆண்களுடன் இரண்டே பெண்கள் இராணுவ பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், என்னால் இதற்கு மேல் விளக்கமாக சொல்ல முடியாது, ஆனால் அது ஒரு விரும்பத்தகாத சம்பவம் என்று கூறுகிறார்.

மற்றொரு தருணத்தில் மூத்த அதிகாரி ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும், அதிர்ஷ்டவசமாக, அவரைத் தள்ளிவிட்டு விட்டு தான் அங்கிருந்து தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

அது குறித்து மேலதிகாரி ஒருவரிடம் புகாரளிக்க முயன்ற போது, உன்னிடம் ஆதாரம் உள்ளதா? சாட்சியம் உள்ளதா? என்று அவர் கேட்க, Alexandra இல்லை என்று பதிலளிக்க, உனக்கு வேலையில் தொடரவேண்டுமானால், வாயை மூடிக்கொண்டு வேலையைப் பார் என்று அவர் கூறியதாகவும் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

கனேடிய இராணுவம், ஏற்கனவே இரண்டு பாலியல் புகார்களை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடி வருகிறது.

Gen. Jonathan Vance என்ற இராணுவ அதிகாரி மீது, அவர் முறை தவறி நடந்துகொண்டதாக அவரது இரண்டு சக பெண் ஊழியர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்கள்.

Adm. Art McDonald என்ற இராணுவ உயர் அதிகாரி தன் மீதான குற்றச்சாட்டுகளால் பதவி விலகியிருக்கிறார்.

இந்நிலையில் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள Alexandra, இப்போதாவது நடவடிக்கை எடுக்குமாறும், அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.