கனடிய இந்து வர்த்தக சபை – வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

canada best hindu temple Sringeri Temple of Toronto
canada best hindu temple Sringeri Temple of Toronto

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கனடாவிற்கு குடியேறிய இந்துக்களின் வாழ்வியல் மற்றும் பொருளாதார நலன்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட CHCC கனடிய இந்து வர்த்தக சங்கம் என்ற ஒரு புதிய அமைப்பினை உருவாக்குவதற்கு தொழில் முனைவோர் குழு ஒருங்கிணைந்து உள்ளது.

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ CHCC உருவாக்கம் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களால் CHCC சங்கத் திறப்புவிழாவில் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட செய்தியில் வரவேற்கப்பட்டது.

” பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடிய வர்த்தக நிலப்பரப்பில் இந்து சமூகத்தினரின் பெரும் பங்களிப்பு உள்ளது மேலும் வர்த்தக சபை முன்னேற்றம் ,பிரதிநிதித்துவம் ,மேம்பாடு போன்றவற்றிக்கு அவசியமான சங்கமாக மாறும் என்று நம்புகிறார் ” என லிபரல் கட்சியின் எம் பி சந்திரா ஆர்யாவால் வாசிக்கப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இந்து வர்த்தக சபையின் புதிய இயக்குனர்கள் கனடாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் .மேலும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், இலங்கை மற்றும் வங்காளதேசத்தில் இருந்தும் கனடாவிற்கு குடியேறியவர்கள் ஆவர். நேபாளம், தென் கிழக்கு ஆசியா, கரீபியன் ,பாகிஸ்தான் போன்ற பிற இடங்களிலிருந்து கனடாவில் குடியேறிய வர்த்தக சபை உறுப்பினர்களின் வணிகங்களையும் இந்த அமைப்பு மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

காணொளி வாயிலாக கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் எதிர்க் கட்சியின் தலைவருமான எரின் மற்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் CHCC உருவாக்கத்தில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.