இந்தியாவில் தேனிலவுக்கு சென்ற கனடியர் உயிரிழப்பு – கோடிக்கணக்கில் முதலீடு செய்தவர்கள் மனைவிக்கு கொலை மிரட்டல்

toronto police

கனடாவில் கிரிப்டோ கரன்சி பரிமாற்றம் செய்யும் நிறுவனம் பல முதலீட்டாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. கனடாவின் வான்கூவர் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய QuadrigaCX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Gerald Cotten என்பவராவார்.

கிரிப்டோகரென்ஸி சந்தைகளில் உச்சத்தைத் தொட்ட போது ஏராளமான மக்கள் Gerald -ன் கிரிப்டோகரன்சி நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். தற்பொழுது அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 215 மில்லியன் கனடிய டாலர்கள் கொடுக்க வேண்டியுள்ளது.

Gerald மற்றும் அவரது மனைவி Jennifer Robertsons இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு தேனிலவை கொண்டாடுவதற்காக இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் Gerald திடீரென மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகின. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உயிரிழந்ததால் அவரது நிறுவனம் திவால் ஆனதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தம்பதியினர் இருவரும் இந்தியாவுக்கு சென்று ஒரு மாதம் ஆன நிலையில் Gerald திடீரென உயிரிழந்ததாக அவரது மனைவி அறிவித்தார்.Gerald-ன் கணினியை அவரது மனைவியால் அணுக முடியாத காரணத்தால் முதலீட்டாளர்களின் பணம் முடங்கி போனது.

Gerald உயிரிழப்பதற்கு முன்பு உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த உயிலில் 9 மில்லியன் டாலர்கள் உட்பட பல்வேறு சொத்துக்களை மனைவி பெயரில் எழுதி வைத்திருந்தார். எனது இந்தியாவுக்கு சென்ற Gerald பணத்துடன் எங்கோ தலைமறைவாகி விட்டதாகவும், அவரது மனைவி நாடகம் ஆடுவதாகவும் முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Jennifer -க்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் கொலை மிரட்டல்கள் வருவதாக தனது புத்தகத்தில் எழுதி வைத்துள்ளார்.