தத்தெடுக்கும் நல்ல காரியத்திற்காக வந்தோம் – இந்தியாவிலிருந்து கனடாவிற்கு திரும்ப இயலாமல் சிக்கித் தவிக்கும் குடும்பம்!

hari gopal

கனடாவின் டொரன்டோ பகுதியை சேர்ந்த ஹரி கோபால் குடும்பம் தற்போது இந்தியாவிலிருந்து கனடாவிற்கு திரும்ப இயலாமல் சிக்கித் தவிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஹரி கோபால் மற்றும் அவரது மனைவி கோமல் ஆகிய இருவரும் குழந்தை ஒன்றினை தத்து எடுப்பதற்காக இந்தியா சென்றிருந்தனர்.

இந்தியாவிலிருந்து கனடா திரும்புவதற்காக தயாராக இருந்த நிலையில் கனடிய அரசாங்கம் இந்தியாவில் இருந்து வரும் விமானங்கள் அனைத்தையும் தடை செய்து அறிவித்தது.

கோமல் தனது முதலாமாண்டு அன்னையர் தினத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாட எண்ணியிருந்தார்.

ஆனால் கனடாவில் இந்தியாவின் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் முடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் covid-19 வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் அச்சத்துடனும் மன அழுத்தத்துடனும் கொண்டாடி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே குழந்தையை தத்து எடுப்பதற்காக இந்தியாவிற்கு சென்றிருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் கனடாவிற்கு திரும்ப இயலாமல் சிக்கி தவிக்கின்றனர்.

மேலும் குழந்தையின் பிறந்தநாள் ஆனது மார்ச் மாதத்தில் வந்து சென்றுவிட்டது. குழந்தை காவேரி உடைய பிறந்தநாள் இந்தியாவின் வைரஸ் தொற்று காரணத்தால் பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் தங்கி இருக்கும்படி ஆகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் நிகழ்ச்சிகளை டொரன்டோ நகரில் கொண்டாடுவதற்காக எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனவே கனடிய அரசாங்கம் இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையேயான விமான சேவை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்