கனடாவில் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக பிரபல நடிகையும் கணவரும் செய்துள்ள மோசடி!

Rodney Baker
Wealthy Canadian couple charged for posing as hotel workers to receive vaccine shots

முறைகேடாக கொரோனா தடுப்பூசி பெற்று  அரசை ஏமாற்றிய வழக்கில் வான்கூவர் தம்பதி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பணக்கார வான்கூவர் தம்பதியினர் கடந்த வாரம் ஒரு தனி விமானத்தில் பீவர் க்ரீக்கிற்கு பறந்ததாகக் கூறப்படுகிறது.

அங்கு அவர்கள் ஹோட்டல் ஊழியர்களைப் பார்ப்பதாகக் காட்டி, ஒரு மொபைல் கிளினிக்கில் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசியினை பெற்றனர்.

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி போடுவதற்காக யூகோன் பிராந்தியத்தில் உள்ள ஒரு தொலைதூர பழங்குடி சமூகத்திற்கு பறந்ததாகக் கூறப்படும், இந்த பணக்கார வான்கூவர் தம்பதியினர் மீது புதன்கிழமை பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

Rodney Baker மற்றும் அவரது மனைவி Ekaterina ஆகியோரின் மீது யூகோனின் அவசர நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

1,000 கனேடியன் (அமெரிக்க டாலர் 783) வரை அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கிரேட் கனடிய கேமிங் கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி பதவியை பேக்கர் ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தார்.

தடுப்பூசி பெறுவதற்கு பூர்வகுடி சமூகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஏனெனில் தொலைதூரத்தன்மை, வயதான மக்கள் தொகை காரணமாக அவர்களுக்கு அவ்வாறான சலுகை வழங்கப்பட்டது.

அதனை முறைகேடாக பயன்படுத்தி, வான்கூவாரில் இருந்து, பூர்வகுடிகள் வாழும் யுகேன் பகுதிக்கு பயணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது மக்களை கொதிப்படைய செய்துள்ளது.

இதையும் படியுங்க: ஹெல்த் கனடா எச்சரிக்கை – கனடாவில் ஆபத்தை உண்டாக்கும் மருத்துவ பொருள் விற்பனைக்கு வந்தது!