கனடாவில் இனவெறி தலை தூக்குகிறதா? வெளிப்படையாக மனம் திறந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

கனடாவின் முக்கிய அரசாங்க அமைப்புகளில் தொடங்கி, நாட்டை நிர்வகிக்கும் அனைத்து துறைகளிலும் அமைப்புவடிவ இனவெறி உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு பின்னர், உலகம் முழுக்க இனவெறி குறித்த பேச்சு விவாதப்பொருளாக உருவெடுத்துள்ளது. அதன் தாக்கம்  கனடாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், இனவெறி குறித்து கருத்து பிரதமர் கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர், நேரடியாக வெளிப்படுத்தப்படாவிட்டாலும், கனடாவில் பல அரசு துறைகளில் அமைப்புவடிவ இனவெறி ஒவ்வொரு மூலையிலும் நுட்பமாக உள்ளது.

அமைப்புவடிவ இனவெறி என்பது நாடு முழுவதும் அரசு எதிர்கொள்ளும் பிரச்சனையாகும்

கடந்த தலைமுறைகளாக நாம் கட்டமைத்துள்ள அமைப்புகள் இனரீதியான பின்னணியிலானது. அவை பழங்குடி பின்னணியிலான மக்களை நியாயமான முறையில் நடத்துவதில்லை என்று கூறியுள்ளார்.

 

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms