பதக்கம் வென்றனர்: ஒலிம்பிக் போட்டியில் அசத்திய கனடாவின் விளையாட்டு வீராங்கனைகள்

Canada ranked one of the most free countries in the world
Canada ranked one of the most free countries in the world

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் :

ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.கனடாவிலிருந்து ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான ரிலே நீச்சல் நடைபெற்றது.

பதக்கம் வென்ற வீராங்கனைகள் :

கனடாவின் டொரன்டோ நகரின் பென்னி மற்றும் கெய்லா லண்டனின் மார்கரெட் நீல்,ரெபேக்கா ஆகியோர் நீச்சல் ரிலே போட்டியில் 3 நிமிடங்கள் 32.78 நொடிகளில் கடந்து முடித்தனர். இரண்டாவது இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பெற்று தங்கத்தை வென்றது. அமெரிக்கா மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றது. கனடாவின் பென்னி அமெரிக்காவைச் சேர்ந்த சைமன் மானுவேலை இலக்கிற்கு குறுகிய இடைவெளியில் முந்திச் சென்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

நாடுகள்                            நேரம்                             பதக்கம்
ஆஸ்திரேலியா             3:29.69.                             தங்கம்
கனடா                               3:32.78.                             வெள்ளி
அமெரிக்கா                    3:32.81.                              வெண்கலம்

2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற போட்டியில் கனடாவைச் சேர்ந்த பெண்கள் ஆறு பதக்கங்களை வென்றனர். மேக் நீல் உலகச் சாம்பியன் அரையிறுதியில் வேகமான நேரத்தில் ஆறாவது நபராக தடம் பதித்தார் .

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற போட்டியில் பென்னி மற்றும் ரக் ஜோடிகள் பங்குபெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது இறுதிப்போட்டியில் ரெபேக்கா முன்னிலை வகித்தார்.

தென்கொரியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர். அதன் பின்னர் டோக்கியோவில் நடைபெற்ற மூன்று ரிலே போட்டிகளிலும் கனடிய வீராங்கனைகள் வெற்றி மேடையை இலக்காக கொண்டுள்ளனர்.