உக்ரேனியர்களை வரவேற்கும் கனடா – விரைவான விசாக்களை பயன்படுத்தி கனடாவில் பாதுகாப்பாக குடியேறலாம்

russia ukraine war trudeau anitha anand chrystia freeland

உக்ரைனை இரக்கமற்று சிதைத்து வரும் ரஷ்யாவிற்கு கனடிய அரசாங்கம் பல்வேறு பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து உயிர் தப்பி வரும் மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக கனடா மேலும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உக்ரேனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு கனடாவில் விரைவாக குடியேறுவதற்கான திட்டங்களை கனடிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ரஷ்யாவின் நிறுவனங்கள் மீது கனடா பொருளாதார அழுத்தத்தை அதிகரித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் படையெடுப்பிலிருந்து தப்பித்து வெளியேறும் உக்ரேனிய மக்கள் அவசரகால பயணத்திற்கு விரைவான தற்காலிக விசாக்களை பயன்படுத்தி கனடாவில் ஒரு பாதுகாப்பான புகலிடத்தை அமைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசாங்கம் அறிவித்தது.

கனடாவிற்கு புலம்பெயர்ந்து வேலை செய்ய விரும்பும் உக்ரேனியர்களுக்கு கனடிய அரசாங்கம் உடனடியாக விசாக்களை வழங்கும்.பின்னர் பாதுகாப்பான நிலைக்கு திரும்பும் போது நாடு திரும்பலாம் என்று குடிவரவுத்துறை அமைச்சர் Sean Fraser கூறினார்.விரைவான விசாக்களை நடைமுறைப்படுத்துவதற்கு சில வாரங்களே ஆகும் என்று கூறினார்.

கனடிய அரசாங்கத்தால் இயன்றவரை பல உக்ரேனியர்களை வரவேற்க தொடங்குவதற்கான விரைவான வழியை இந்த திட்டம் தூண்டுவதாக கூறினார். படையெடுப்பு முடிந்ததும் பெரும்பான்மையான மக்கள் உக்ரைனுக்கு திரும்ப எண்ணுவார்கள் என்பதை உக்ரேனிய சமூகத்துடனான கலந்துரையாடல்களின் போது அறிந்து கொண்டதாக Fraser கூறினார்