கனடாவில் குடியேற விரும்புபவர்களுக்கு கனடிய அரசாங்கம் எச்சரிக்கை – பெரும் தொகை மோசடி

Beirut explosions
Canada Pm

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக கனடாவிற்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு போன்ற தேவைகளுக்காக கனடாவிற்கு புலம் பெயரும் மக்கள் நிரந்தரமாக குடியேறுவதற்கு முயற்சிக்கின்றனர். பெரும் தொகை செலுத்தியாவது கனடாவிற்கு குடியேற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளவர்களை குறிவைத்து சில ஆலோசகர்கள் மோசடி செய்து வருகின்றனர்.

குடியுரிமை கோரிக்கையாளர்கள் மோசடியில் சிக்கிக் கொள்வதைத் தடுக்கும் வகையில், புலம்பெயர் ஆலோசகர்களை ஒழுங்கு படுத்துவதற்கான அமைப்பினை கனடிய அரசாங்கம் உருவாக்கியுள்ளது. பெரும்பாலான புலம்பெயர்தல் ஆலோசகர்கள் நேர்மையாக செயல்பட்டாலும் ,சில மோசடியாளர்கள் மக்களை ஏமாற்றுவதாகவும் கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

லட்சக்கணக்கான அகதிகளும், பிற நாட்டு மக்களும் குடிப்பெயர்வதற்காக புலம்பெயர் ஆலோசகர்களை தான் நாடுகிறார்கள். எனவே கனடாவில் குடியேற விரும்பும் மக்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் ஆலோசகர்கள் கனடாவில் குடியேற விரும்பும் மக்களிடம் பெரும் தொகையை கட்டணமாக வசூல் செய்கின்றனர். இனி கட்டணம் வசூலிக்க வேண்டுமானால் முறைப்படி உரிமம் பெறவேண்டும் என்று கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

” நம் நாட்டில் குடியேற விரும்புபவர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை ” என்று புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser புதன்கிழமை கூறினார். நவம்பர் மாதம் 23ஆம் தேதி புலம்பெயர்தல் ஆலோசகர் ஒழுங்குமுறை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனடாவில் தங்கியிருக்கும் பெருந்தொகை செலுத்தியேனும் குடியுரிமை பெற்றுவிடத் துடிக்கும் நிலையை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்ற முயல்வோர்களிடமிருந்து இந்த அமைப்பு காப்பாற்றும் என்று தெரிவித்துள்ளது