ரஷ்யாவில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள் – கனடிய அரசாங்கத்தின் பயண ஆலோசனைகள்

canada travel restriction to canadians not go to russia and ukraine

ரஷ்யா உக்ரைன் மீது மோசமான தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உக்ரேனில் வசிக்கும் மக்கள் பலரும் நாட்டைவிட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர். பெரும்பாலான மக்கள் கனடாவில் குடியேறி வருகின்றனர். ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக கனடியர்கள் ரஷ்யாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் ஏற்கனவே அங்கு இருந்தால் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் கனடிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததை தொடர்ந்து கனடிய அரசாங்கம் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. பயணிகளுக்கான பயண ஆலோசனை கனடிய அரசாங்கத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா ஆயுத தாக்குதலை நடத்தி வருவதால் ரஷ்யா தொடர்பான நிதி பரிவர்த்தனைகள், விமான தேர்வுகள் உட்பட பயணங்களையும் தவிர்க்குமாறு தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே ரஷ்யாவில் வாசிப்பவராக இருந்தால் வணிக வழிகள் இருக்கும்போது ரஷ்யாவில் விட்டு வெளியேறி விட வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளது.அதேவேளையில் உக்ரைனுக்கு பயணம் செய்வதையும் கனடியர்கள் தவிர்க்க வேண்டுமென்று தெரிவித்துள்ளது.’

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் பற்றி விவாதம் செய்தல், ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பகிர்தல் மற்றும் போராட்டங்கள் அல்லது பெரிய கூட்டங்களில் பங்கேற்பது போன்றவற்றை தவிர்க்குமாறும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. BBC போன்ற முக்கிய செய்தி ஊடகங்கள் ரஷ்யாவில் இருந்து அறிக்கையிடுவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன.