முடிவை மாற்றுங்கள் – கனடாவிற்கு பாகிஸ்தான் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Dreamliner
Air Canada temporarily suspends service to India

கனடாவில் covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருப்பதை தொடர்ந்து கனடிய அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.

Covid-19 வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து கனடிய அரசாங்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலிருந்து கனடாவிற்கு பயணிக்கும் விமானங்கள் அனைத்திற்கும் தடை விதித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கனடாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டிலிருந்து கனடாவிற்குள் நுழையும் அனைத்து விமான பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் அரசாங்கம் கனடிய அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

கனடாவிற்கான பாகிஸ்தான் தூதுவர் இது தொடர்பிலான கடிதம் ஒன்றினை கனடாவின் போக்குவரத்து துறை அமைச்சர் ஓமர் அல்காப்ராவுக்கு எழுதி அனுப்பி வைத்து உள்ளார்.

மேலும் இந்தக் குறிப்பிட்ட கால விமான சேவை தடையினால் பயணிகள் சிக்கல்களை சந்திக்க நேர்ந்துள்ளது. தற்பொழுது பாகிஸ்தானில் covid-19 வைரஸ் தொற்று பரவவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த அளவிலான பாதிப்புகளே பாகிஸ்தானில் பதிவாகிக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பாகிஸ்தானில் தற்பொழுது வரை ஆறாயிரத்திற்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே covid-19 வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி இருக்கிறது.

ஆனால் செய்தி மற்றும் ஊடகங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் உள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பாகிஸ்தான் விமான சேவை தடை குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் என்று கனடாவிற்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.