உலகில் பணிபுரிய ஏற்ற நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு முதலிடம்!

Canada tops US as most attractive destination for foreign workers
Canada tops US as most attractive destination for foreign workers

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உலகில் பணிபுரிய ஏற்ற நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

Boston Consulting Group (BCG)  மற்றும் The Network வெளியிட்ட ஒரு ஆய்வில், இந்த விவரம்  தெரியவந்துள்ளது.

அக்டோபர் மற்றும் டிசம்பர் 2020 க்கு இடையில் 190 நாடுகளில் 209,000 பேரிடம் இந்த ஆய்வு ஆய்வு செய்யப்பட்டது.

2014 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்டத்தில் மூன்றாம் இடத்தில் இருந்த கனடா தற்போது முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Canada tops US as most attractive destination for foreign workers

2014 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் முதலிடத்தைப் பிடித்த அமெரிக்கா சிறந்த பணிபுரிய ஏற்ற இடமாக விரும்பப்படும் நாடுகளில் வீழ்ச்சியைக் கண்டது. இப்போது, கனடா வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான முதல் தேர்வு நாடாக மாறியுள்ளது.

கணக்கெடுப்பின்படி, தொற்றுநோய்க்கு கனடாவின் தொடர் நடவடிக்கைகள் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.  னென்றால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அதை நிர்வகிப்பதில் கனடா சிறப்பாக வேலையைச் செய்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும், கனடா அமெரிக்காவை விடச் சிறந்த சமூக அமைப்புகள் மற்றும் திறந்த கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது.

முதுகலை பட்டங்கள் அல்லது முனைவர் ஆய்வு, டிஜிட்டல் பயிற்சி அல்லது நிபுணத்துவம் மற்றும் 30 வயதிற்கு குறைவானவர்களுக்கு கனடா பணியாற்ற சிறந்த இடமாகும்.

நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் இருந்தாலும், எந்த நகரங்களும் முதலிடம் பெறவில்லை. ரொறொன்ரோ கனடாவின் மிக உயர்ந்த தரவரிசை கொண்ட நகரமாகும். இது 14ஆவது இடத்தில் உள்ளது.

How companies have changed in the rankings compared with their COVID-19 levels