கனடாவில் அதிவீரிய கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிப்பு! தென்னாப்பிரிக்க திரிபு ஆட்டிப்படைக்கப் போகிறதா?

COVID19
COVID19 Canada

கனடாவில் தினசரி கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தென்னாப்பிரிக்க கொரோனா திரிபு வைரஸும் கனடாவுக்குள் நுழைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று மட்டும் ஒரே நாளில் கனடாவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 9,197 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

128 பேர் பலியாகியுள்ள நிலையில், கனடாவில் இது வரையில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 16,707 ஆக உயர்ந்துள்ளது.

கனடாவின் பொது சுகாதார அலுவலரான Dr. Theresa Tam இது குறித்து கூறும் போது, முதல் தென்னாப்பிரிக்க வைரஸின் திடீர் மாற்றம் கொண்ட வைரஸ் ஆல்பர்ட்டாவில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கனடாவில் 14 பேருக்கு பிரித்தானிய திடீர் மாற்றம் கொண்ட வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. புதிய வகை கொரோனா வைரஸ், கனடாவிலும் ஊடுருவிவிட்ட நிலையில், புதிய கட்டுப்பாடுகளை கனடா அரசு அறிவித்துள்ளது.

கனடாவிற்கு வருகை தருபவர்கள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது.

வருகை தருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக பிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற்றால் மட்டுமே கனடா வருகை தர அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

கனடா வருகை தந்த பின்பு, 14 நாட்கள் தனிமைப்படுத்தடுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க: இனி மக்கள் தாராளமாக குடியேறலாம்! கனடாவின் முடிவால் உலக நாடுகள் மகிழ்ச்சி!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.