நான்கு வீரர்களின் உடல் மீட்கப்பட்டதா.? கனடா ஹெலிகாப்டர் விபத்து தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

கடலில் விபத்துக்குள்ளான கனேடிய ஹெலிகொப்டரில் பயணித்த ஆறு கனேடிய ஆயுதப்படை வீரர்களில், நான்கு பேரின் உடல்பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உடல்பாகங்கள் வியாழக்கிழமை ஒன்ராறியோவின் தலைமை மரண விசாரணை அதிகாரியால் நன்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.

கேப்டன் கெவின் ஹேகன், , கேப்டன் மாக்சிம் மிரோன்-மோரின், துணை லெப்டினென்ட். மத்தேயு பைக், மற்றும் மாஸ்டர் கார்போரல் மத்தேயு கசின்ஸ் ஆகியோர் அதில் அடங்குவர்.

மே 25 ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் திகதி வரை நடத்தப்பட்ட அமெரிக்க கடற்படையுடன் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது இந்த உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

உடல்பாகங்கள் வரும் நாட்களில் குடும்பங்களுக்கு கையளிக்கப்படும் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.

நேட்டோ பயிற்சிப் பணியில் பங்கேற்றபோது, கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி ஸ்டால்கர் 22 என அழைக்கப்படும் கனடா ஹெலிகாப்டர் அயோனியன் கடலில் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms