அமெரிக்காவை மிரட்டும் கனடா – மின்சார வாகன வரி கடனில் இருந்து பின் வாங்க வேண்டும் என்று துணைப் பிரதமர் கடிதம்

ev tax america christia freeland

அமெரிக்கா விதித்துள்ள மின்சார வாகன வரிகள் கனடிய வாகன தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. எனவே, மின்சார வாகனங்கள் மீதான வரிகளின் சதவீதத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா செயல்பட வேண்டும் என்று கனடிய அரசாங்கம் பலமுறை கோரிக்கை வைத்தது.

கனடிய துணைப்பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலான்ட் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மேரி என் ஜி மின்சார வாகன வரி தொடர்பாக அமெரிக்க செனட்டர்களுக்கு கடிதம் எழுதினர்.மின்சார வாகன வரி கடன் திட்டத்திலிருந்து அமெரிக்கா பின் வாங்காத வரை அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்றும் USMCA ஒப்பந்தத்தின் சில திட்டங்களை இடை நிறுத்துவதாகவும் அமெரிக்காவின் உயர்மட்ட செனட்டர்களுக்கு துணைப்பிரதமர் கிறிஸ்டியா அச்சுறுத்தும் வகையில் கடிதம் எழுதினார்.

மின்சார வாகன வரி வரவுகளில் சில விதிகள் மெக்சிகோ -அமெரிக்கா -கனடா நாடுகளின் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா விதிமுறைகளை மீறுவதால் வருத்தம் கொண்டுள்ளதாக சர்வதேச வர்த்தக அமைச்சர் மேரி மற்றும் துணை பிரதமர் பிரீலேண்ட் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள தொழிற்சங்கத் தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் மின்சார கார்களை வாங்குபவர்களுக்கு &12500 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வரிச் சலுகைகளை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரி நடவடிக்கைகள் கனடிய வாகன தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடா வருடந்தோறும் கிட்டத்தட்ட $22 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வாகன உதிரி பாகங்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறது. கனடிய அரசாங்கம் தனது தேசிய நலன்களை பாதுகாக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.