Canada : அமெரிக்காவிற்கு கனடா கொடுக்கப்போகும் பதிலடி! கொரோனா சூழலிலும் நசுக்க நினைத்த அமெரிக்காவின் நடவடிக்கை!

Canada
Canada Tax Hike

Canada : அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வர்த்தக மோதல் சர்வதேச அளவில் பெரிய பிரச்சனையாக உருமாறிக் கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது வரி விதித்தது அமெரிக்கா.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது சீனா.

இந்நிலையில், தற்போது கனடாவுடனும் வர்த்தகப் போரை தொடங்கியுள்ளது அமெரிக்கா. கனடாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் அலுமினியப் பொருட்களுக்கு 10 % வரி விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்கனவே கனடா போராடி வரும் நிலையில், அமெரிக்காவின் திடீர் இந்த கூடுதல் வரி விதிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ, கனடாவில் இறக்குமதியாகும், அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Real HEROES of COVID 19 : கனடா கொண்டாடும் தமிழ் தம்பதி! உழைப்புக்கு கிடைத்துள்ள உயரிய கௌரவம்!

இது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக அமெரிக்கா தொடர்ந்து, இது போன்று  பல்வேறு உலக நாடுகளுடன் பகை உணர்வை வளர்த்துக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

இனி வரும் காலங்களில் இது சரியான முன்னெடுப்பாக இருக்காது என்று அமெரிக்க அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

வட அமெரிக்க பொருளாதார ஒப்பந்தத்தை மீறி டிரம்ப் அரசு செயல்படுவதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடையே போடப்பட்டது. அமெரிக்கா தன்னை அமெரிக்க நாடுகளில் பெரிய நாடாக காட்டிக் கொள்ள இவ்வாறு செய்கிறது என கனடா குற்றம் சாட்டுகிறது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms