கனடாவில் தமிழர்களுக்கு பெருகும் ஆதரவு! மார்க்கம் நகரில் உருபெறும் தமிழ் நினைவெழுச்சி தூபி!

Gari
Canada Supports Srilankan Tamils

கனடாவில் தொடர்ந்து தமிழர்களுக்கான ஆதரவு பெருகி வருகின்றது. மேலும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் போற்றி வருகிறது.

தமிழ் மொழி இன பண்பாட்டு மொழியாக கனடா அரசாங்கம் அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் கனடாவின் மார்க்கம் நகரில் ஏழாம் வட்டாரத்தில் தமிழ் நினைவெழுச்சி தூபி ஒன்று அமைப்பதற்கான திட்டம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் குறித்து மார்க்கம் நகரின் ஏழாம் வட்டார நகர சபை உறுப்பினர் கரி ஆனந்த சங்கரி அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்களின் அவல நிலையினை குறிக்கும் வகையில் முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி ஆனது அமையுமென்று கரி ஆனந்த சங்கரிஅறிவித்துள்ளார்.

நினைவுத்தூபியை தான் எழுப்பும் ஈழம் வட்டாரத்தில் அமைக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து மிக விரைவில் மார்க்கம் நகரசபை கூட்டத்தில் முன் மொழிவது பற்றி முன்வைக்க உள்ளதாகவும் வெளியிட்டுள்ளார்.

தமிழ் நினைவெழுச்சி தூபி குறித்த திட்டம் உரையாடல் பற்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று மெய்நிகர் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே பிராம்டன் நகரசபையில் தமிழின நினைவுத்தூபியை அமைக்கும் திட்டத்திற்கு நகர சபை அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.