மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுப்போம்! கனடாவில் தமிழர்கள் பக்கம் நிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்!

america canada border
canada

இலங்கையில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை மற்றும் இனவெறி தாக்குதலை எதிர்த்து கனடாவில் பல்வேறு போராட்டங்களும் வாகன  பேரணிகளும் நடத்தப்பட்டன.

மேலும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா தொடர்ந்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரான ஜெனிபர் ஓ கன்னல் அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இவர் பிக்கரிங் ஆக்ஸ்பிரிட்ஜ் என்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். நாடாளுமன்றத்தில் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது இந்த அறிவித்தலை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கும், அத்துமீறும் தாக்குதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் வாழும் தமிழர்களும் மற்றும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களும் போராடி வருகின்றனர்.

மேலும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறலுக்கு சர்வதேச கண்காணிப்புக்கு அழைப்பு விடுத்த மனித உரிமையின் 46 1 என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று வெளியிட்டுள்ளார்.

கனடா இதுபோன்ற மனித உரிமை மீறலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்ற அனைவருக்கும் உறுதுணையாக இருப்பதோடு சமாதானம் மற்றும் மேம்பாடு போன்றவற்றை எந்த நிலையிலும் ஆதரித்து வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவில் வாழும் தமிழர்கள்,கனடா அரசாங்கம் தமிழர்களுக்கு உறுதுணையாக திகழ்ந்து வருவது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

இதே போல் கனடா அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்துள்ளனர்.