Canada Tamil News: சீனாவின் 1 மில்லியன் தரமற்ற மாஸ்குகளை நிராகரித்த கனடா

Canada Tamil News

Canada Tamil News: சுகாதாரத் தொழிலாளர்களுக்காக சீனாவிலிருந்து வாங்கிய 1 மில்லியன் முகமூடிகளை கனடா நிராகரித்துள்ளது. ஏனெனில் அவை கனடா அரசு நிர்ணயித்த தரத்தை பூர்த்தி செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

N95 மாஸ்க்கின் சிறந்த மாற்றாக கனடா அதிகாரிகள் கருதிய KN95 சுவாசக் கருவிகள் – N95 மாடல்களைக் காட்டிலும் குறைவான பாதுகாப்பு கொண்டதாகக் கண்டறியப்பட்ட பின்னர் கனடா முழுவதிலும் உள்ள முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு விநியோகிக்கப்படாது என்று குளோப் மற்றும் மெயில் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வைரலாகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வீடியோ – உண்மை தானா?

“இன்றுவரை, [கனடாவின் பொது சுகாதார நிறுவனம்] சுமார் ஒரு மில்லியன் KN95 மாஸ்க்குகள் சுகாதார அமைப்புகளின் அளவுகோலை ஈடு செய்யவில்லை என்பது  அடையாளம் காணப்பட்டுள்ளது” என்று செய்தித் தொடர்பாளர் எரிக் மோரிசெட்டே கூறினார். “இந்த மாஸ்க்குகள் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் அத்தியாவசிய சுகாதார பராமரிப்பு ஊழியர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை” என்றும் கூறினார்.

மாஸ்க்களுக்கான பணத்தைத் கனடா திரும்பப் பெறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று குளோப் மற்றும் மெயில் தெரிவித்துள்ளது.