கனடாவில் 55 ஆயிரம் தாண்டியது கொரோனா பாதிப்பு – அரசு தீவிர நடவடிக்கை

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல நாட்டு தலைவர்களும் தீவிர ஆலோசனைகளுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மருத்துவ உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது வரை கொரோனா வைரஸால் கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – 55,061

பலியானோர் எண்ணிக்கை – 3,391

சிகிச்சை மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை – 22,751

கனடாவில் வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வந்தாலும், அரசு கடுமையான ஊரடங்கு நடவடிக்கையை பின்பற்றி வருகிறது.