கனடா தலைநகர் Ottawa-வில் பள்ளிகள் திறந்து சில நாட்களில் காத்திருந்த பேரதிர்ச்சி!

Ottawa
Canada schools debate how to act on common cold symptoms

Ottawa: கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் பள்ளிகள் திறந்து சில நாட்கள் கூட ஆகத நிலையில், மீண்டும் மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

மூன்று இடங்களில், பள்ளிகளுடன் தொடர்புடைய 38 பேருக்கு கொரோனா பரவியதை  தொடர்ந்து கல்வியாண்டு தொடங்கியதுமே பள்ளிகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

ஒட்டாவாவில் வசித்து வரும் சமீனா கலீல் என்ற பெண் இது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். அவருடைய இரண்டு குழந்தைகளும்  Broad view Avenue Public School என்ற பள்ளியில் படிக்கிறார்கள்.

சமீபத்தில் அவருக்கு பள்ளியிலிருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அதில் பள்ளியுடன் தொடர்புடைய ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இன்னும் பள்ளி துவங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் சமீனா.

மேலும், என்னுடைய கேள்வி என்னவென்றால், ஒருவருக்கு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று எவ்வளவு சீக்கிரம் அவருடன் தொடர்பிலிருந்த மற்றவர்களுக்கு பரவ முடியும் என்பதுதான் என்னுடைய கேள்வி என்கிறார்.

பள்ளியிலிருந்து ஒருவேளை செய்தி ஏதவாது வந்தால் என்ன செய்வது என்பதற்காக, தனது கைப்பேசியை தனக்கு அருகிலேயே வைத்துக் கொண்டு,  ஒரு நாள் முழுவதும் அமர்ந்திருப்பதாக தெரிவிக்கிறார்.

எனக்கு ஒரு பொறுப்பும் இருக்கிறது என்று கூறும் சமீனா, எனது மகனுக்கு ஒரு வேளை வெளியே தெரியாத வகையில் கொரோனா இருந்து, அவனுக்கு தெரியாமலே அவன் மற்றவர்களுக்கு கொரோனாவைப் பரப்புபவனாக இருந்தால் என்ன செய்வது, நான் அதில் பங்குவகிக்க விரும்பவில்லை என்கிறார்.

இதையும் படியுங்க:கனடாவில் மீண்டும் தேசிய அளவில் லாக்டவுன் அறிவிக்கப்படலாம்! ஆட்டிப்படைக்கும் கொரோனா!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.