CRA : கனடாவில் இணையத் தாக்குதல்களால் முடக்கப்பட்ட வருவாய் முகமையின் இணைய சேவை மீண்டும் தொடக்கம்!

CRA
Usernames Passwords over 9000 canada government accounts stolen

தொடர்ச்சியான இணையத் தாக்குதல்களால் முடக்கப்பட்ட வருவாய் முகவரகத்தின் (CRA) இணையச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கனடாவில் அரசு சேவைகளில் (CRA) பதிவு செய்யப்பட்டிருந்த 9000 பயனர்களின் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, இன்றைய சூழ்நிலையில், அனைத்து வகையான சேவைகளும் இணைய வழிப் பயன்பாட்டிற்கு மாற்றப் பட்டுள்ளன.

இதன் காரணமாக பல்வேறு நாடுகளில், பொதுமக்கள் சேவை தொடர்பான விவரங்கள் மற்றும் முக்கிய கோப்புகளை அவ்வப் போது ஹேக்கர்கள் இணைய வழியில் திருடி வருகின்றனர்.

இந்த சம்பவம் கடந்த சில மாதங்களாக உலக நாடுகளில் அச்சுறுத்திய நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலியா, ஈரான் ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அந்த வரிசையில் தற்போது கனடாவும் இணைந்துள்ளது. கனடாவின் அரசு சேவைகளுக்கான தளத்தில் இருந்து சுமார் 9000 பயனர்களின் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Bill Morneau : கனடா நிதியமைச்சா் திடீர் ராஜினாமா! பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுடன் மோதல் வெடிப்பு!

இந்த தாக்குதல்கள் கனடா மத்திய அரசின் 30 துறைகள் மற்றும் CRA (கனடா வருவாய் முகமை) கணக்குகளால் பயன்படுத்தப்படும் G.C.K சேவையை குறி வைத்துள்ளன என்று கனடா செயலகத்தின் கருவூல வாரியம் விளக்கமளித்தது.

கிட்டத்தட்ட 9,041 G.C.K கணக்கு வைத்திருப்பவர்களின் கடவுச் சொற்கள் மற்றும் பயனர்களின் பெயர்கள் மோசடியாக திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பயனாளர்களின், அனைத்து கணக்குகளும் ரத்து செய்யப் பட்டுள்ளன. இது தவிர சுமார் 5,500 கனடா வருவாய் முகமை கணக்குகளும் இதில் குறிவைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து, வரி செலுத்துவோர் தகவல்களைப் பாதுகாப்பதற்காக, தங்களுடைய செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

இந்த நிலையில், தொடர்ச்சியான இணையத் தாக்குதல்களால் முடக்கப்பட்ட வருவாய் முகவரகத்தின் இணையச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இணையச் சேவைகள் காப்புப் பிரதி எடுக்கப்பட்டு கனடியர்களை நிதி உதவிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் தளம், நேற்று (புதன்கிழமை) மாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms