கனடாவிற்குள் நுழையும் பயணிகளின் கவனத்திற்கு – கனடிய அரசாங்கத்தின் புதிய பயண விதிமுறைகள்

canada relaxeing covid rules for travellers

கனடாவிற்குள் பயணிகள் நுழைவதற்கான பயண கட்டுப்பாடுகளை கனேடிய அரசாங்கம் மேலும் தளர்த்தியுள்ளது.இருப்பினும் covid-19 பரிசோதனையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன .கனடாவிற்குள் நுழைவதற்கு முன்பு Covid-19 பரிசோதனை அவசியம் ஆகும். மற்ற நாடுகளிலிருந்து கனடாவிற்கு திரும்புவது சிக்கலானதாகவும் விலை உயர்ந்ததாகவும் இருக்கும்.கனடாவிற்கு பயணிக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு தெரிந்துகொள்ளவேண்டிய விதி முறைகள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு கனடாவிற்கு விமானம் மூலம் பயணிப்பவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பு PCR மூலக்கூறு பரிசோதனையின் எதிர்மறையான முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது பயணிகள் விரைவான ஆன்டிஜன் பரிசோதனையை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை முதல் பயணிகள் விரைவான ஆன்டிஜன் பரிசோதனையை எடுக்கலாம். இது PCR மூலக்கூறு பரிசோதனையை விட மிகவும் விரைவானது மற்றும் மலிவானது ஆகும். ஆனால் PCR மூலக்கூறு பரிசோதனையை போலத் துல்லியமானது கிடையாது.பரிசோதனை எடுத்து சில நிமிடங்களிலேயே முடிவுகள் வழங்கப்படும்.

பயணிகள் தாங்கள் புறப்படும் நாட்டில் விரைவான ஆன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை முழுமையாக பெற்றிருக்க வேண்டும். மேலும் விரைவான ஆன்டிஜென் பரிசோதனையானது ஆய்வகங்களில் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது