இந்தியாவிற்கு உதவிட கனடா அரசாங்கம் எப்பொழுதும் தயார் – அமைச்சர் அனிதா ஆனந்த் உறுதி!

anita
minister of defense

கனடாவில் covid-19 வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான பல்வேறு ஏற்பாடுகளும் விரைவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளும் covid-19 வைரஸ் தொற்று பரவலுக்கான சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் covid-19 இரண்டாவது அலையாக உருவெடுத்து தீவிரமாக பரவி வருகிறது.

இதனோடு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.

தற்பொழுது இந்தியாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர்களும், மருத்துவ உபகரணங்களும் தேவைப்படுகிறது.

இந்தியாவின் இக்கட்டான நிலையை பூர்த்தி செய்வதற்கு உதவ கனடா தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் கனடாவின் உதவும் திட்டம் குறித்து இந்தியாவிலுள்ள கனடாவின் தூதுவர் உடன் பேச்சுவார்த்தையில் தொடர்பு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவலை கனடாவின் கொள்வனவு அமைச்சர் அனிதா ஆனந்த் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். கனடா இந்தியாவிற்கு உதவுவதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும், மேலும் உதவுவதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு தற்பொழுது தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள், செயற்கை சுவாச கருவி மற்றும் தனிநபர் முகக் கவசங்கள் அனைத்தினையும் கனடா அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள இயலும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் பரிதாபமான நிலையில் உயிரிழக்கும் மக்களுக்கு உடனடியாக உதவிட கனடா அரசாங்கம் எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பதாகவும் லிபரல் கட்சியின் உறுப்பினர் மற்றும் அமைச்சர் அனிதா ஆனந்த் அறிவித்து உள்ளார்.