கனடாவில் குடியேறுவதற்கு தக்க சமயம் – வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க கனடா திட்டம்

corona in canada, canada tamil news, கனடா தமிழ் செய்திகள், கொரோனா கனடா

Covid-19 காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டில் கனடாவில் பெரும்பாலான எல்லைகள் மூடப்பட்டதன் விளைவாக நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 180000 ஆக குறைந்தது. எல்லைகள் மூடப்பட்டதன் காரணமாக நிரந்தர குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை 45 சதவீதம் குறைந்தது என்று தகவல்கள் கூறுகின்றன.

கனடிய அரசாங்கம் தற்போது நிரந்தர குடியுரிமை வழங்கும் இலக்கை 2021 ஆம் ஆண்டில் அடைந்தது. ஏறத்தாழ 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு கனடா குடியுரிமை வழங்கி உள்ளது. கனடாவில் ஏற்கனவே உள்ள தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குடிவரவுத்துறை அமைச்சர் சீன் ஃபிரேசர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வயதான மக்களை ஆதரிக்கவும் கனடிய அரசாங்கம் குடியேற்றத்தை நம்பி உள்ளதாக அமைச்சர் கூறினார். கடந்த ஆண்டு குடியேற்ற இலக்கை நிர்ணயித்து தற்பொழுது இலக்கை அடைந்ததாக அமைச்சர் சீன் ஃபிரேசர் கூறினார்

லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த குடியேற்றத்தை நம்பியுள்ளது. எதிர்வரும் ஆண்டில் 4 லட்சத்து 11 ஆயிரம் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு குடியுரிமை வழங்க உள்ளதாக கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கனடாவில் குடியேற விரும்புபவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். கல்வி ,வேலைவாய்ப்பு மற்றும் தொழில் போன்ற பல்வேறு காரணங்களுக்காக கனடாவில் குடியேற விரும்பும் அயல் நாட்டவர்களுக்கு கனடிய அரசாங்கத்தின் இந்தத் திட்டம் மிகுந்த பயனளிக்கக் கூடியதாக அமையும் என்று கூறப்படுகிறது