கனடா Covid-19 வைரஸை பார்சலில் அனுப்பியது – சீனாவின் கருத்து நகைப்பிற்குரியது என்று நிராகரிக்கப்பட்டது

China
china flights

காற்றின் மூலம் எளிதாக பரவக்கூடிய covid-19 வைரஸ் தொற்று உலகின் பல்வேறு நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. உலக மக்களின் அடிப்படை வாழ்க்கை, பொருளாதாரம் போன்றவற்றை முழுவதுமாக சீர்குலைத்தது covid-19 என்னும் வைரஸ் தொற்று. தற்போதைய நிலைக்கு காரணமான covid-19 வைரஸ் தொற்றின் பிறப்பிடமாக சீனாவில் உள்ள வூஹான் என்ற நகரத்தை பெரும்பான்மையான மக்கள் கூறுகின்றனர்.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் வசிப்பவருக்கு covid-19 தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சீனாவின் சுகாதார அதிகாரிகள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். கனடாவிலிருந்து ஹாங்காங் வழியாக வந்த அஞ்சல் அல்லது பார்சல் மூலம் பீஜிங்கில் வசிப்பவருக்கு covid-19 தொற்று ஏற்பட்டதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன சுகாதார அதிகாரிகளின் கருத்து நகைப்பிற்குரியதாக உள்ளது என்று கனடா அதனை நிராகரித்தது. கனடாவின் அஞ்சல் துறை மற்றும் உலக சுகாதார அமைப்பு அஞ்சல் கடிதங்கள் மூலம் வைரஸ் தொற்று பரவும் அபாயம் குறைவு என்று கூறியுள்ளன. ஆனால் பீஜிங் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் துணை இயக்குனருக்கு சீனா அதிகாரிகளின் அறிக்கை காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் சீன நிபுணரான Margaret 30 வருடங்களுக்கு மேலாக ஃபெடரல் பொதுச் சேவையில் சீன சிக்கல்களில் பணியாற்றியவர். Covid-19 வைரஸ் மேற்பரப்புகளில் தங்காது என்று விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளதை சீன அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று கூறினார்.

பரப்புகளில் Covid-19 வைரஸ்களின் வாழ்நாள் குறைவு என்பதால் சில நாட்களுக்குள் அனுப்பப்படும் பொருட்கள் மற்றும் பார்சல்கள் மூலம் பரவும் அபாயம் குறைவு என்று கனடா அஞ்சல் தெரிவித்துள்ளது.