கனடாவில் லாக் டவுன் ‘இன்னும் பல வாரங்கள்’ நீடிக்கும் – ட்ரூடோ

கனடாவில் ஊரடங்கு உத்தரவு “இன்னும் பல வாரங்கள்” நீடிக்கும் என்று புதன்கிழமை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். பொருளாதாரத்தை நோக்கி நாம் அடியெடுத்து வைத்தால், கனடா மக்கள் இப்போது செய்யும் அனைத்து தியாகங்களும் ஒன்றும் இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.

கனடாவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு 50 மில்லியன் டாலர் நிதியுதவி

இதுகுறித்து அவர் உரையாற்றுகையில், “நாம் இப்போது என்ன செய்கிறோமா அதை இன்னும் பல வாரங்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும். சகஜ வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கு நாம் அவசரம் காட்ட முடியாது. ஏனென்றால் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்த நாம் விரைவாக செயல்பட்டால், இப்போது நாம் செய்கிற அனைத்தும் ஒன்றுமில்லாமல் போய்விடும். அப்படி நடந்தால், மோசமான மற்றொரு உச்சத்தில் இருப்போம். பொருளாதாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் மீட்க முடியும் என்று வல்லுநர்கள் கூறுவதுபடி, நாம் மிகவும் கவனமாக நடவடிக்கை எடுத்து அதைச் செய்வோம்” என்று ட்ரூடோ கூறினார்.

நாட்டின் 37 மில்லியன் மக்களில் சுமார் 6 மில்லியன் மக்கள் மார்ச் மாதத்தில் இருந்து அரசாங்க உதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.