கனடாவில் பரவி வரும் பறவைக்காய்ச்சல் -12000 வான்கோழிகள் கொல்லப்பட உள்ளது

Canada
Toronto, Peel Region

கனடாவில் மனிதர்களுக்கு Covid-19 மற்றும் ஓமிக்ரான் வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகின்றன.வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கனேடிய அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது.

கனடிய மாகாணமான நோவா ஸ்கோஷியாவில் மேலும் ஒரு வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள பறவைகளுக்கு இடையே தீவிரமாக பரவி வரும் இந்த வைரஸ் தொற்றானது பெரும்பாலான பறவைகளை உயிர் இழக்கச் செய்துள்ளது.

தீவிரமாக பரவி வரும் பறவை காய்ச்சலினால் சுமார் 12000 வான்கோழிகள் கொல்லப்பட உள்ளன.நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பறவைக்காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு கோழி பண்ணையில் இருக்கும் 12000 வான்கோழிகளை கொல்லப்பட உள்ளதாக கனடிய உணவு ஆய்வு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

Avian influenza என்றழைக்கப்படும் பறவை காய்ச்சல் வேகமாக பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை எது என்ற விவரங்களை வெளியிடவில்லை.

அந்த குறிப்பிட்ட பண்ணையில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதனைச் சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ள மற்ற கோழிப் பண்ணைகளுக்கு நோய் பரவாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கனடிய உணவு ஆய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.