கனேடிய மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி! விரைவில் செயல்பாட்டுக்கு வரும் திட்டம்!

astrazeneca
astrazeneca Vaccine

அமைச்சர் அனிதா ஆனந்த் அஸ்ட்ரா ஜெனி கா தடுப்பூசி மருந்துகள் முதல் பகுதியாக கனடாவிற்கு இன்று வரவழைக்கப்படும் என்று தகவல்களை வெளியிட்டார்.

முதல்படியாக 5 லட்சம் தடுப்பூசி மருந்துகள் கனடாவை வந்தடையும் என்றும் கூறியுள்ளார்.

இந்த 5 லட்சம் தடுப்பு மருந்துகளும் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா மற்றும் வெரைட்டி ஃபார்மசீயூடிகல்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து கிடைக்க பெற்றுக்கொள்ளப்படும் என  தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த வாரத்தில் ஏறத்தாழ ஒன்பது லட்சம் தடுப்பூசி மருந்துகள் கனடாவிற்கு வரவழைக்கப்படும் என்று தகவலை வெளியிட்டார் அனிதா ஆனந்த்.

இந்த வார இறுதிக்குள் சுமார் 9 லட்சத்து 44 ஆயிரத்து 600 தடுப்பூசி மருந்துகள் கனடாவிற்கு வரவழைக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் மார்ச் மாத இறுதிக்குள் கனடாவில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் தடுப்பூசி மருந்துகள் விரைவில் விநியோகிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தடுப்பூசி மருந்துகளை விநியோகித்தல் என்பது அத்தியாவசியமான செயல்பாடாகும்.

கனடாவின் பல்வேறு பகுதிகளில் வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை தினமும் அதிகம் பதிவாகிக் கொண்டே இருப்பதால், அப்பகுதிகளில் அவசரகால நிலை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடிய மக்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் வெளியே நடந்து கொள்ள வேண்டும் என்று கனடா அரசாங்கம் கனடிய மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.