கனடாவில் தீவிரமாக பரவும் கொரோனா – மருத்துவ பணியில் களமிறக்கப்படும் இராணுவம்!

montreal
Montreal Child Fire Accident

உலக நாடுகள் முழுவதிலும் பரவி வரும் covid-19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நாடுகள் தொடர்ந்து எதிர்த்துப் போராடி வருகின்றன.

தற்பொழுது கனடாவில் தடுப்பூசி மருந்துகள் செலுத்தும் வயதுவரம்பு குறைக்கப்பட்டு தடுப்பூசி மருந்து வினியோகம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து covid-19 வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை பல்வேறு மாகாணங்களில் அதிகரித்து வருகிறது.

ஒன்டாரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் மருத்துவமனைகளில் பணிச்சுமை அதிகரித்துள்ளது.

எனவே மருத்துவமனையில் பல்வேறு பணிகளை பகிர்ந்து பணிபுரிவதற்கு கனடாவின் ராணுவ படைகளை கண்காணிக்கும் மருத்துவக் குழுக்களை களத்தில் ஈடுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளின் சிக்கலை கட்டுப்படுத்துவதற்கு கனடிய ராணுவப் படைகளின் 3 மருத்துவக் குழுக்கள் களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த அறிக்கையை பொது பாதுகாப்பு துறை அமைச்சர் பில் பிளேர் வெளியிட்டுள்ளார். மேலும் களத்தில் பங்கேற்க உள்ள இந்த மூன்று மருத்துவ குழுக்கள் அனைத்து மருத்துவ சேவைகளையும் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த திட்டமானது ஒன்டாரியோ மாகாணத்தின் சாலிசிட்டர் ஜெனரல் சில்வியா டோன்ஸ் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க இறுதியாக தீர்மானம் செய்யப்பட்டதாக அரசாங்கம் தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சுலபமாக கையாள இயலும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வைரஸ் தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று வெளியிட்டுள்ளனர்.